தமிழில் வெளியாகும் ஏறத்தாழ எல்லாப் பத்திரிகைகளிலும், அவற்றின் சினிமா செய்திகளின் ஊடே பரிச்சயமான ஜெ. பிஸ்மி, அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவருடைய எழுத்துப்பணியின் முதல் புள்ளியும் அதுவே. அப்பாவோடு கனவும் என்கிற இந்த புத்தகம் ஜெ.பிஸ்மிக்குள்ளேயிருந்த எழுத்தாளன் என்கிற இன்னொரு முகத்தை அடையாளம் காட்டியது.
வெளியிடப்பட்ட அவசர கதியிலேயே அர்த்தம் கலைந்து மரித்துப் போகும் பத்திரிகைச் சொற்குவியலை மீறி தன்னை ஓரளவேனும் படைப்பாற்ற லுடன் பத்திரப்படுத்திக் கொள்ள விரும்பும் ஜெ.பிஸ்மியின் முயற்சியே பதினெட்டு சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு.
சிறுகதை – ஓர் இலக்கிய வடிவம். ஆனால் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகளில் இடம் பெறும் கதைகள் பலவும் பக்க நிரப்பிகளாகத் திணிக்கப்பட்டவை. செயற்கையான சித்தரிப்பு, வழுக்கலான நடை, சுவாரசியமான முடிவுஎன்ற தீர்மானிக் கப்பட்ட இலக்கணத்தில் ஒடுங்குபவை. ஜெ.பிஸ்மியின் கதைகள் பத்திரிகைகளில் வெளி யானவை. எனினும் அவற்றின் இலக்கணத்துக்கு விரோதமானவை. உயிர்ப்பின் சலனமும் உணர்வின் தீவிரமும் கொண்டவை.
Reviews
There are no reviews yet.