கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பதிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கிவரும் போதி இதுவரை எண்பதுக்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
திரைப்படம் சார்ந்த புத்தகங்கள் மிக அபூர்வமாக வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் திரை இலக்கியத்தை வளர்தெடுக்கவேண்டும் என்ற பேராவலில் உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட போதியின் முதல் வெளியீடு தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் காதல்கோட்டை திரைக்கதை.
அந்தப் புத்தகத்துக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழின் மிக முக்கிய திரைப்படங்களாக கருதப்படும் பாரதி கண்ணம்மா, பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், சேது, ராம் ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைகளை வெளியிட்டது போதி.
இவை தவிர பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான ஜெ.பிஸ்மி எழுதிய தமிழ் சினிமாவில்…, தமிழ்சினிமா எழுச்சியும்… வீழ்ச்சியும்…, தமிழ்சினிமா சொல்ல மறந்த கதைகள், தமிழ்சினிமா : சில நிகழ்வுகள்… பதிவுகள், மாற்றுக்களம், களவுத் தொழிற்சாலை, நிழல்களின் தேசம், உலகைக் கலக்கிய திரைப்படங்கள், குறும்படங்களும்… ஆவணப்படங்களும்…, தமிழ்சினிமா இன்று, தமிழ்சினிமா : உள்ளே வெளியே, நேர்மையான கேள்விகள் நேர்த்தியான பதில்கள், தமிழ் சினிமா : சாதித்ததா? சறுக்கியதா? ஆகிய புத்தகங்களும் போதி வெளியீடாக வாசகர்களை சென்றடைந்துள்ளன.
கலைமாமணி வி.ராமமூர்த்தி எழுதிய திரையுலக சிகரங்கள், திரைப்பட இயக்குநர் கேயார் எழுதிய இதுதான் சினிமா, இயக்குநர் விக்ரமன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம், ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய பளபள உலகம் கலகல பார்வை ஆகிய போதி வெளியிட்ட புத்தகங்கள் திரைத்துறையை நேசிப்பவர்களுக்கு அரிய பொக்கிஷங்களாக திகழ்கின்றன.
திரைப்படம் சார்ந்த புத்தகங்கள் தவிர பிரபல எழுத்தாளர்களான தமயந்தி, கௌசல்யா ரங்கநாதன் மற்றும் ஜெ.பிஸ்மி எழுதிய சிறுகதை தொகுப்புகளையும், நாவல்களையும் வெளியிட்டுள்ளது போதி.
பத்திரிகையாளர் ஆர்.வைதேகி எழுதிய வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க 90 தொழில்கள் ஆகிய பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வல்லமை கொண்ட, புத்தகங்களையும் வெளியிட்டுள்ள போதி, உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாந்தர் இவானவிச் குப்ரின், அலெக்சாந்தர் குப்ரின், அலெக்சாந்தர் புஷ்கின், இவான் துர்கேனிவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ், நிக்கலாய் கோகல், மக்ஸீம் கார்க்கி, வேரா பானோவா ஆகியோருடைய மொழிபெயர்ப்பு நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.