About Author
கௌசல்யா ரங்கநாதன்

தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் கௌசல்யா ரங்கநாதன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான எழுத்தனுபவம் கொண்ட இவரது கதைகள் வெளிவராத தமிழ்ப்பத்திரிகைகளே இல்லை. தவிர தொலைக்காட்சித் தொடர்களாகவும் இவரது கதைகள் வாசகர்களை சென்றடைந்திருக்கின்றன.
அது மட்டுமல்ல, தமிழ்ப்பத்திரிகைகள் நடத்திய போட்டிகள் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்திய போட்டிகளில் கௌசல்யா ரங்கநாதனின் படைப்புகள் ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் வென்றிருக்கின்றன. கலைமகள், அமுதசுரபி போன்ற இலக்கிய இதழ்கள் நடத்திய பல போட்டிகளில், பலமுறை இவரது படைப்புகள் பரிசை வென்றிருக்கின்றன. கௌசல்யா ரங்கநாதன் எழுதிய மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஆடும் ஓநாயும் புத்தகமும் ஒன்று.